‘கங்குவா’ படத்திற்கு இவ்வளவு கம்மியா சம்பளம் வாங்கிய சூர்யா!

Published:

நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் ‘கங்குவா’. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக சூர்யா குறைவான சம்பளம் வாங்கி உள்ளார் எனவும், அதற்காக காரணம் தொடர்பிலும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சுமார் 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி அக்ஷன் படமாக உருவாகும்  ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்கு 28 கோடி ரூபா தான் சம்பளமாக கோரி உள்ளாராம் சூர்யா.

அதற்கு காரணம், சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான 24 படம் வசூல் ரீதியில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடு செய்யவே தற்போது சூர்யா மிக குறைவான சம்பளத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது

Related articles

Recent articles

spot_img