ஐஸ்வர்யாவுடன் விவாகரத்துக்கு காரணம் இதுதானா..

Published:

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தனுஷ் – ஐஸ்வர்யா.

இந்த தம்பதிக்கு யாத்ரா – லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை இதுவரை இவர்கள் அணுகவில்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி 2004ல் நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என்று அறிவிக்க வேண்டும் என விவாகரத்து கேட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய என்ன காரணம் என பலரும் கேட்டு வருகிறார்கள். பல தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல்கள் பேசப்பட்டு வரும் நிலையில், சில நடிகைகளுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மற்ற விஷயங்களை ஐஸ்வர்யா சகித்து கொண்ட போதிலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்ததால் தான் விவாகரத்தின் காரணம் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Related articles

Recent articles

spot_img