வெயிட்டிங் வீணா போகல, மாஸ் அப்டேட் கொடுத்த VP..

Published:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று அசால்டாக அப்டேட் கொடுத்து விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. GOAT படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து மெர்சல் ஆகி இருக்கின்றனர்.

ரம்ஜான் அதுவுமா எந்த முஸ்லிம் பிரண்ட்ஸ் கிடைப்பாங்க, பிரியாணி ட்ரீட் கேட்கலாம்னு எல்லாரும் சுத்திக்கிட்டு இருக்கும்போது, ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வேற லெவல் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் வெங்கட் பிரபு.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் என ஏதாவது வெளியிடுவார்களோ என்று தான் முதலில் எல்லோருக்கும் தோணுச்சு. ஆனால் நேரம் போகப் போக அட இவர் ரிலீஸ் தேதியை தான் சொல்லப் போகிறார் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.

அடிடா மேளம், போடுடா வெடி என்று விஜய் ரசிகர்களும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 2,3 மணி நேரமா ட்விட்டரில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் நேரம் வீண் போகவில்லை.

GOAT படத்தின் மூலம் தளபதி விஜய் தரிசனத்தை வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பார்ப்பதற்கு எல்லாரும் ரெடியாக வேண்டி தான். லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில், தளபதியின் அடுத்த படமான GOAT இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறிவைத்து இந்த ரிலீஸ் தேதியை லாக் செய்து இருக்கிறார்கள் பட குழுவினர். கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பது இந்த படத்தின் பெரிய பாசிட்டிவான விஷயம்.

பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளங்களை திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே விஜய் நடிப்பில் GOAT படம் ரிலீஸ் ஆகிறது.

Related articles

Recent articles

spot_img