பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற திரைப்படத்தை தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான்கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சல்மான் கானுடன் இணையும் திரைப்படத்திற்கு ’சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சல்மான் கான் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு மிக விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/C5nF1yop-Qe/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==