‘துப்பறிவாளன் 2’..அப்டேட்

Published:

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ’துப்பறிவாளன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியை சமீபத்தில் முடித்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் செய்யும் வேலையை விஷால் நேரடியாக செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

’துப்பறிவாளன்’ திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக சமீபத்தில் லொகேஷன் பார்க்கும் பணிக்காக விஷால் லண்டன் சென்று இருந்தார் என்பதும் அதனை அடுத்து அஜர்பைஜான், மால்டா உள்ளிட்ட பகுதிகளில் அவர் லொகேஷன் பார்த்து விட்டு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால், பிரசன்னா தவிர மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை விஷாலே ஆடிஷன் வைத்து தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் ஆடிஷன் செய்து அதன் பிறகு தான் தேர்வு செய்யப்பட்டவர்களை இயக்குனரிடம் அறிமுகப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் விஷால் நேரடியாக ஆடிஷனில் கலந்து கொண்டு இந்த படத்தின் சில கேரக்டர்களுக்காக அவரே நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img