இனியாக்கு கமிட்டான புது ஜோடி! கோபிக்கு சோலி முடிஞ்சு

Published:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்க இனியா தனக்கு ஏற்ற மாதிரி யாரும் இல்லை, எல்லாரும் வயதானவர்களாக இருக்கிறார்கள் என புலம்புகிறார். இதனால் எழில் பாட்டுபோட அங்கிருந்து பழனி அக்காவின் மகன் டான்ஸ் ஆடிக்கொண்டே கீழே வருகிறார்.

கீழே வந்து ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரையும் இழுத்து  வைத்து டான்ஸ் ஆடுகிறார். அத்துடன் ஈஸ்வரி பாட்டி க்யூட்டா  இருக்கீங்க என எல்லாருக்கும் ஐஸ் வைக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டு வர இனியாவை பார்க்கிறார். இனியாவை பார்த்ததும் அவருக்கு பிடித்து விடுகிறது.

இதைத் தொடர்ந்து இனியா வெளியில் வந்து போன் பேசிக் கொண்டிருக்க, அவருடன் பேசுவதற்காக வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனை பழனிச்சாமியின் தங்கை பார்த்துவிட்டு அவரது அக்காவை கூப்பிட்டு அண்ணனுக்கு அம்மா பொண்ணு பார்த்தா, அவங்க பொண்ண உங்க பையன் பார்க்கிறான் அப்படி என்று பேசுகிறார். இதனால் அவர்  விமலை உள்ளே கூட்டிச் செல்கிறார். அதன்பின் பழனிக்கு கேக் வெட்டுகிறார்கள்.

பழனிச்சாமியின் அம்மா பாக்கியா பேசுவதையும் அங்கு உள்ளவர்களை கவனிப்பதையும் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். பழனிச்சாமிக்கு கேக் வெட்டி முடித்த பிறகு எல்லாருக்கும் பாயாசம் கொடுக்கிறார். பாக்கியாவின் சமையலைப் பற்றி எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

அத்துடன் பாயாசத்தை கொடுத்துவிட்டு பாக்கியா செல்ல,  இதை செஞ்ச கைக்கு தங்க வளையல் இல்லை வைர வளையல் தான் போடணும் என பழனி சொல்ல, பழனிச்சாமியின் தங்கை ஒரு மாதிரி பார்க்கிறார். ஆனால் அவரது அக்கா சிரிக்கிறார்.

இறுதியாக எல்லாரும் போட்டோ எடுக்கலாம் என விமல் சொல்லி எல்லாரையும் வைத்து போட்டோ எடுக்கிறார். அதில் இனியாவை தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். அந்த இடத்திற்கு பாக்கியா வர பழனிச்சாமி அவரையும்  கூப்பிட்டு தனக்கு அருகில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதை பார்த்து அவரது அம்மா சந்தோஷப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Related articles

Recent articles

spot_img