‘குக் வித் கோமாளி’ தர்ஷன் திருமணமா?

Published:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் அதன் பிறகு ’தும்பா’ ’துணிவு’ ’அயலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் இருப்பினும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை அஞ்சு குரியனுடன் தர்ஷன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அஞ்சு குரியன் தமிழில் ’நேரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’சென்னை டு சிங்கப்பூர்’ ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் திருமண புகைப்படத்தை பார்த்த பலர் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக நினைத்து வாழ்த்து கூறிவரும் நிலையில் இது ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பு என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தான் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் விளம்பரத்திற்காக திருமணம் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தர்ஷன் அஞ்சு குரியன் திருமண புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img