உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த ’தக்லைஃப்’ படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கமல்ஹாசன் தேர்தல் பணி காரணமாக தற்காலிகமாக விலகினார் என்றும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை ’தக்லைஃப்’ படக்குழுவினர் வீணடித்து விட்டதாக கூறி இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதை அடுத்து கமல்ஹாசன் மீண்டும் அடுத்த வாரம் முதல் ’தக்லைஃப்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் மீண்டும் ’தக்லைஃப்’ படத்திற்கு திரும்பி வர இருப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து அவருக்கு வேற ஒரு கேரக்டர் அளிக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு ஆகிய மூவருமே இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இருந்து விலகிய நடிகர்களே மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது தலைகீழ் மாற்றமாக கருதப்பட்டாலும் படக்குழுவினர் தற்போது திருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.