’கனா காணும் காலங்கள் 3’.. தரமான அப்டேட் வந்துருச்சு..

Published:

’கனா காணும் காலங்கள்’ இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சீசன் 3 வெளியாகும் என்று கூறப்பட்டது. முதல் இரண்டு சீசன்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மூன்றாவது சீசனும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இதற்கான  பூஜை நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’கனா காணும் காலங்கள் ’முதல் சீசன் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இரண்டாவது சீசன் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு முடிந்தது என்பது தெரிந்தது. முதல்  சீசன் பத்தாவது வரை படிக்கும் மாணவ மாணவிகளின் கனவுகள், நிகழ்வுகள் இரண்டாவது சீசனில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவ மாணவிகளின் அனுபவங்களாக இருந்தது என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் அதே மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும்? அவர்களது புதுமையான அனுபவம் எப்படி? காதல் அனுபவம் எப்படி? என்பது குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’கனா காணும் காலங்கள் 3’ பூஜை தற்போது முடிந்துள்ளதாக அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எனவே ’கனா காணும் காலங்கள்’ சீசன் 3 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் மாதம் பூஜை போடப்பட்டுள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் ’கனா காணும் காலங்கள் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு சீசன்களில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மூன்றாவது சீசனிலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது சீசனின் தரமான அப்டேட் வந்ததை எடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related articles

Recent articles

spot_img