பண்றது எல்லாம் மொள்ளமாரித்தனம்..

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் எபிசோடு பார்க்கும்போது அடுத்த நாளைய எபிசோடை எதிர்பார்த்து காத்திருக்கும் அளவுக்கு ரசிகர்களை சீரியல் குழுவினர் வைத்திருக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

தற்போது மனோஜ் எப்படியும் கனடா போய் சேர வேண்டும் என்றும், வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் அவருக்கு பணம் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் காட்சியையும், அதன் பிறகு முத்து, மீனா அவரை வீட்டுக்கு அழைத்து வந்த காட்சியையும் பார்த்தோம். இந்த நிலையில் ரவி, ஸ்ருதி ஆகியோர் மீண்டும் வீடு திரும்ப உள்ளனர் என்ற நல்ல விஷயமும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தினசரி சில ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் ஒரு புதிய ரிலீஸ் வீடியோவை செய்துள்ளார். அதில் ’பண்றது எல்லாம் மொள்ளமாரித்தனம், ஆனா மூஞ்சியை மட்டும் காலண்டரில் வரும் முருகன் போட்டோவுல சிரிக்கிற மாதிரியே வச்சிருக்கியே என்ற சந்தானம் வசனத்தின் பின்னணியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வீடியோ, மலையாள சீரியல் படப்பிடிப்பின்போது எடுத்த நிலையில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கட்டி வந்த அதே சேலையை தான் இப்போதும் கட்டியுள்ளார் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர். சீரியல் தான் ரீமேக் என்றால் காஸ்ட்யூம் கூட அதே தானா? என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C50s7RnRpMw/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img