நூலிழையில் உயிர் தப்பிய ‘கயல்’ சீரியல் நடிகை..!

Published:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நாயகி ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்டது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

’கயல்’ சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாகவும், அப்போது போரூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மெட்ரோ கட்டுமான பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை தனது காரின் மேல் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் மிகவும் ஆபத்தானதாக இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக தனக்கு காயம் இல்லை என்றாலும் சிமெண்ட் கலவை தனது காரில் ஒட்டிக் கொண்டதால் அதற்கு அதிகமாக செலவானதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடைய தவறு எதுவுமே இல்லாமல் நான் எனது விலையுயர்ந்த காருக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து தனக்கு கவலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ பணிகள் எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும் இதில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கும் வகையில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் அங்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் காரில் சென்றதால் எனக்கு ஆபத்து இல்லை, ஆனால் இதுவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும், பலத்த காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்த அலட்சியத்திற்கு பொறுப்பேற்பது யார் என கேள்வி எழுப்பி உள்ள சைத்ரா ரெட்டி பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்ததாரர்கள் செயல்பட வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/C5okX_6Btge/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img