மீண்டும் கதாநாயகன் வேடத்தில் கலக்கும் மோகன்

Published:

‘மூடுபனி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த ‘மெளன ராகம்’ படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

தற்போது விஜய்யின் ‘கோட்’ படத்தில் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது ‘ஹரா’ என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ் , ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.

‘ஹரா’ படத்தின் ‘டீசர்’ வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் மோகன் ராஜ் பேசியபோது “இது நாங்கள் தயாரிக்கும் 2- வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது. இந்த படம் மீண்டும் மோகனுக்கு வெற்றியை பெற்று தரும்

இப்படத்தில் 93 வயது சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் தாதா வேடத்தில் அவர் நடித்துள்ளார்” என்றார்

 

 

 

 

Related articles

Recent articles

spot_img