பாக்கியம் வைத்த ஆப்பு.. இனிமேல் தான் மீனா ஆட்டத்தை பார்ப்பிங்க..!

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்து சாப்பிடும் போது மீனா கேட்ட ஒரு கேள்வியால் அதிர்ச்சி அடையும் தங்கமயில் அம்மா பாக்கியம், மீனாவை வெறுப்பேற்றும் வகையில் மறு கேள்வி கேட்க, அப்போது மீனா வில்லி போல் பார்ப்பது உடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது. இதையடுத்து மீனாவின் ஆட்டத்தை இனிமேல் தான் பார்ப்பீங்க என்பது போல் அடுத்து கதை நகரும் என்று தெரிகிறது.
இன்றைய எபிசோடில் ஒரு வழியாக இரு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்ய தட்டை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு தங்க மயிலுக்கு சரவணனும், சரவணனுக்கு தங்க மயிலும் மோதிரம் அணிந்தனர். இதனை அடுத்து திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு அதன் பின் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறார்கள்.
சாப்பிடும் போது மீனா, தங்கமயில் அம்மா பாக்கியத்திடம் உறவுக்காரர்களை தான் அழைக்கவில்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து இருக்கலாமே என்று கேட்க, பக்கத்து வீட்டில் எல்லோரிடத்திலும் சண்டை என்பதை சொல்ல முடியாமல் பாக்கியம் மற்றும் அவரது கணவர் சமாளிக்கின்றனர்.
இந்த நிலையில் முடிஞ்சு போன விஷயத்தை கிளறுகிறாயா என்று மனதிற்கு ஆவேசமான பாக்கியம் என்கிட்டேயே ஏழரை கூட்டுறியா, உன்னை என்ன செய்றேன் பார் என்று முடிவு செய்து மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் ஓடிப்போய் தானே கல்யாணம் செய்து கொண்டார்கள், நகை எதுவும் போட்டுக் கொண்டு வரவில்லையே என்று கூறி தனது மகள் மட்டும்தான் முறையாக கல்யாணம் செய்து வரும் மருமகள் என்றும் நகை போட்டு கல்யாணம் செய்யும் மருமகள் என்றும் குத்திக்காட்டி பேசினார்.
இந்த பேச்சு மீனா மற்றும் ராஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாண்டியன், கோமதி மற்றும் அனைவரும் அதை சமாளிக்க பேச்சை மாற்றுகின்றனர். தன்னை மற்றவர்கள் மத்தியில் அவமானப்படுத்தி விட்டதாக கருதும் மீனா, பாக்கியத்தை வில்லி போல் பார்க்கும் நிலையில், இனி தான் மீனா தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாக்கியம் குடும்பத்தாரை சந்தேகப்படும் மீனா அடுத்ததாக என்ன செய்வார் என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img