4 தமிழ் இயக்குநர்களை தூக்கிட்டு வரச்சொன்ன பாலகிருஷ்ணா..

Published:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 4 தமிழ் இயக்குநர்களை தூக்கி வரச் சொல்லி கதை கேட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் நடித்து சலித்து போய்விட்ட நிலையில் இனி அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழில் வெற்றி படங்கள் கொடுத்த 4 இயக்குநர்களை சந்தித்து பாலகிருஷ்ணா கதை கேட்டுள்ளதாகவும் இந்த நான்கு கதைகளில் ஒரு கதையை அவர் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா படம் என்றாலே ஓவர் ஹைப் இருக்கும் என்பதும் பில்டப் பயங்கரமாக இருக்கும் என்பதும் தெரிந்தது. அவர் கேட்டபடி கதை தயார் செய்து தமிழ் இயக்குநர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கும் நிலையில் இந்த 4 இயக்குநர்களில் ஒருவர் ஹரி என்ற தகவல் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் 10 படங்கள் இயக்கினால் கூட கிடைக்காத சம்பளத்தை ஒரே படத்தில் தருவதற்கு பாலகிருஷ்ணா ஒப்பு கொண்டிருப்பதால், பாலகிருஷ்ணா படத்தை இயக்குவதற்கு தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருவதாக புறப்படுகிறது.

எனவே பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை இயக்குவது தமிழ் இயக்குநர் தான் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக இயக்குனர் ஹரியிடம் கதை கேட்டு சில திருத்தங்களை பாலகிருஷ்ணா சொல்லி இருப்பதாகவும் அந்த திருத்தங்கள் பாலகிருஷ்ணாவிற்கு பிடித்து விட்டால் அவர்தான் அடுத்த படத்தின் இயக்குநர் என்றும் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img