இதனால் தான் இன்ஸ்டாகிராம் விட்டு சென்றேன்..

Published:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “whistle podu” வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதுவரை இப்பாடல் 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இருப்பினும் சிலர் whistle podu பாடலை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்துவந்தனர். இதனால் யுவன் ஷங்கர் ராஜா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீங்கிவிட்டார் என்று தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக பேசிய யுவன், தொழில்நுட்ப கோளாறால் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் சரியாக வேலை செய்யவில்லை. எங்களுடைய குழு மீட்கும் பணியில் இரங்கியுள்ளனர் என்று யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ளார்.

https://x.com/thisisysr/status/1780911181945016453

Related articles

Recent articles

spot_img