விஷாலை பார்த்து பயந்துவிட்டாரா உதயநிதி?

Published:

நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி குறித்தும், அவரது திரைப்பட நிறுவனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது விஷால் படத்துடன் இணைந்து வெளியாக இருந்த ’அரண்மனை 4’ திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடித்த ’ரத்னம்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ’அரண்மனை 4’ திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஷால் தன்னுடைய படங்களை வலுக்கட்டாயமாக வேறு தேதியில் ரிலீஸ் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பாக ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் எங்கள் படத்தை வெளியிட வேண்டாம் என்று சொல்வதற்கு இவர்கள் யார் என்றும் விஷால் தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேட்டியில் இருந்து அவர் உதயநிதியை தான் மறைமுகமாக கூறுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷாலின் அடுத்த படம் ’ரத்னம்’ வெளியாகும் அதே தினத்தில் தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் ’அரண்மனை 4’ திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் இதனால் விஷாலின் ’ரத்னம்’ படம் போட்டியின்றி சோலோவாக ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img