தமிழகம் திரும்பினாரா விஜய்???

Published:

தளபதி விஜய்எப்போதுமே வாக்களிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை இது இன்னும் கூடுதலாக மாறி இருக்கிறது. காரணம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விஜய் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் இப்போது விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இப்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இப்போது அங்கு ஒரு சேஸிங் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 19 நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

வாக்களிப்பதற்காக விஜய் ரஷ்யாவில் இருந்து இன்று இரவு புறப்படுகிறார். மேலும் அவர் இந்த முறை யாருக்கு வாக்களிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனென்றால் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளார்.

இப்போது தமிழகத்தில் கடுமையான மும்முனைப் போட்டி இருந்து வருகிறது. அதிமுக, திமுக மற்றும் பாஜக கடுமையாக போட்டுவிடுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்காக சீமான் களத்தில் இருக்கிறார். ஒருமுறை சிவப்பு மற்றும் கருப்பு நிற சைக்கிளில் சென்றதால் திமுகவுக்கு ஆதரவாக விஜய் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் வாக்கு சாவடி அருகில் உள்ளதால் எதர்ச்சையாக சைக்கிளில் விஜய் சென்றது சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேலும் இப்போது ஒரு கட்சி தலைவராக விஜய் சரியான தலைவருக்கு தான் வாக்கு அளிப்பார்.

Related articles

Recent articles

spot_img