ஜீ தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டீவி பிரபலம்

Published:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சீதாராம் சீரியல். இந்த சீரியலை மேலும்  விறுவிறுப்பாக்க பிரபல காமெடி நடிகை ஒருவர் அதிரடியாக என்ட்ரி ஆகியுள்ளார்.

சீதாராம் சீரியலில் தற்போது ராமின் தங்கச்சி அஞ்சலி, யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறார். அவருடன் சேர்ந்து அவரை அழைத்துச் சென்ற சீதாவும் பழியையும் ஏற்று, குடும்பத்தை எதிர்த்து நிற்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த அஞ்சலியையும் அவரது கணவரையும் வாசலில் நிற்க வைத்து கிழித்து தொங்க விட்டார் மகாலட்சுமி. அது மட்டும் இன்றி அஞ்சலி இனி சேதுவுக்கு மகள் இல்லை என கூறி அதிரடி காட்டி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சீதாராம் சீரியலை மேலும் விறுவிறுப்பாக பிரபல சீரியல் நடிகை தீபா இது சீரியலில் அன்புக்கு அம்மாவாக என்ட்ரி ஆகி உள்ளார்.

அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில் மகாலட்சுமி வீட்டுக்கு வந்த அன்புவின் அம்மா, அவர்கள் எல்லாரையும் விரட்டியதோடு மட்டுமில்லாமல் அன்புவையும் அஞ்சலியையும் பிரித்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என மிரட்டி உள்ளார். எனவே இனி இந்த  சீரியல் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

இதேவேளை, நடிகை தீபா விஜய் டிவி சீரியல்கள் நடித்து உள்ளதோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img