என் கடமைய நான் செஞ்சுட்டேன்

Published:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து கொண்டிருக்கிறது. வெயில் காலம் என்பதால் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்குப்பதிவு துவங்கியதுமே வந்து வாக்களித்தார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், தனுஷ், பிரபு, சிவகார்த்திகேயன், குஷ்பு, சுந்தர் சி, சசிகுமார் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்துவிட்டார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதீப் ஆண்டனியும் காலையிலேயே வாக்களித்துவிட்டார்

தான் வாக்களித்த பள்ளிக்கு முன்பு நின்று செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதீப் ஆண்டனி கூறியிருப்பதாவது,

https://x.com/TheDhaadiBoy/status/1781166237109895189

என் கடமைய நான் செஞ்சுட்டேன். உங்க கடமையா, எங்கள செய்யாம இருங்க. பார்த்து செய்யுங்க என தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img