அதிர்ப்தியை ஏற்படுத்திய நடிகர்

Published:

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலாவது ஆளாகவே தனது வாக்கை பதிவு செய்திருந்தார் நடிகர் அஜித்.

தற்போது இளைய தளபதி விஜய்யையும் சென்னை திரும்பிய நிலையில், தனது வாக்கை பதிவு செய்வதற்காக கிளம்பியுள்ள காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அதேபோல சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், குஷ்பூ, சசிகுமார், கார்த்திக் ,பிரபு, திரிஷா ஆகிய பிரபல நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவு செய்ய சென்ற இடத்தில் அங்கு சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் கூச்சாலினால் காதுகளை பொத்திக் கொண்டு சென்ற காணொளி தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

இவ்வாறு அஜித் குமாரை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் அவரின் பெயரை சொல்லி கூச்சலிட்ட நிலையில், அவர் தனது காதுகளை பொத்திக் கொண்டு சென்றுள்ளார்.

அஜித் குமாரின் இந்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே அஜித் குமார் ரசிகர்கள் செல்பி எடுக்கும் போது போனை பறித்து வீசிய சம்பவங்களும் இடம்பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img