குஷ்பு வெளியிட்ட புதிய போஸ்டர்..!

Published:

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்றும் இதே தேதியில் விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்றும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம்.

 

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ’அரண்மனை 4’ படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை வெளியிட்டு அது குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டர் படி ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

’அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு எந்த காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்றாலும் மே 3 என்பது சரியான ரிலீஸ் தேதி என்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார் என்பதும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/khushsundar/status/1781194177168171088

Related articles

Recent articles

spot_img