என்னது ரத்னம் ரிலீஸ் நிகழ்ச்சி கேன்சலா?

Published:

விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருந்த அதே தேதியில் ‘அரண்மனை 4’ படமும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ’அரண்மனை 4’ படம் மே மூன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி சோலோவாக ‘ரத்னம்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் ‘ரத்னம்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக விஷால் சற்றுமுன் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள் என்பதால் வாக்கு போட்டு முடித்தவுடன் விஷால் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அதில் சில மாற்றம் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த விஷால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்து இருந்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ‘ரத்னம்’ படம் ஏமாற்றமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/VishalKOfficial/status/1781292825558294724

Related articles

Recent articles

spot_img