நிபந்தனை விதித்த பிரேமலதா

Published:

தளபதி விஜய்க்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த்தை ஏஐ டெக்னாலஜி மூலம் சில காட்சிகள் சேர்க்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அந்த காட்சிகளை தான் பார்த்து ஓகே செய்ய செய்த பின்னர் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

’கோட்’ படத்தில் விஜயகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருக்கிறதா? விஜயகாந்த்துக்கு உரிய மரியாதை தரப்பட்டுள்ளதா? என்பதை பிரேமலதா பார்த்த பின் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு ’கோட்’ படக்குழுவினரும் ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவருக்கு பிரத்யேகமாக காட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ’கோட்’ படத்தில் பயன்படுத்தியதற்காக தயாரிப்பு தரப்பில் இருந்து ஒரு பெரிய தொகையை கொடுத்த முன் வந்ததாகவும் ஆனால் பிரேமலதா அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img