எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே..

Published:

இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி,நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் 1,2, கோடியில் ஒருவன் என தொடர்ந்து நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளிவந்தது.

நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். மேலும் முக்கியமான ரோலில் மிர்னாலினி ரவி, விடிவி கணேஷ், இளவரசு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படங்களை மோசமாக விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் ரோமியோ படத்தையும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே.

ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்

https://x.com/vijayantony/status/1781537067086004427

Related articles

Recent articles

spot_img