மீனாவுக்கு என்ன கலர் பிடிக்கும்

Published:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மீனா பூக்கடையை நினைத்து அழுது கொண்டு இருக்க, முத்து அவரை சமாதானம் செய்து சாப்பிட்ட வைக்கிறார். அவர்கள் அப்படியே மாடியில் தூங்கி விடுகிறார்கள்.

மறுநாள் காலையில் வீட்டு வேலை ஒன்றையும் செய்ய இல்லையே என்று விஜயா மீனாவை தேடுகிறார். மீனா மேலே இருந்து வர ஏன் லேட், வீட்டு வேலை எல்லாம் யாரு பாக்கிற என்று திட்டுகிறார்.

ஒரு நாளைக்கு யாரும் போட மாட்டாங்களா என்று மீனா கேட்க, அப்போ நான் போடணுமா என விஜயா கேட்கிறார். விஜயா மீனாவுக்கு திட்டிக்கொண்டு இருக்க, அங்கு வந்த முத்து ஏன் அவளை திட்டுறீங்க, இந்த பாலரம்மா கோபி போட மாட்டாங்களா என கேட்க, நாங்க வெளிய சாப்பிடுவோம் என கிளம்புகிறார். இதனால் விஜயா மீண்டும் திட்ட, நானே வீட்டு வேலை எல்லாம் பாக்கிறேன் என  அழுது அழுது பாத்திரம் கழுவுகிறார்.

அதன்பின் விஜயா, குருவி உயர உயர பறந்தாலும் பருந்து ஆக முடியாது என கிண்டல் அடிக்கிறார். முத்து நேரா தனது நண்பர்களிடம் சென்று விஷயத்தை கூற, அவர்கள் காசு போட்டு மீனாவுக்கு பைக் வாங்க போகிறார்கள்.

இதை தொடர்ந்து, மீனாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என கேட்டு பைக் வாங்குகிறார். அப்படியே பைக் வாங்கி வந்து, கீழே எல்லாரையும் வருமாறு போன் பண்ணி வர வைக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Related articles

Recent articles

spot_img