முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு?

Published:

விஜய்யின் பழைய படமோ, புதிய படமோ எதுவாக இருந்தாலும் அந்த ஒரு பெயருக்காக ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும்.அதுவே ஒரு ஹிட் படம் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படி விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தான் ஒரு விஷயம் நடந்துள்ளது.

அதாவது விஜய்யின் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி மாஸ் வெற்றிப்பெற்ற கில்லி திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.பிரான்ஸில் வெளியாக அங்கு ரசிகர்கள் போட்ட கொண்டாட வீடியோவை நாம் நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தின் முன்பதிவு அமோகமாக நடந்துள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸ்களில் நேற்றே படம் வெளியாகிவிட்டது.கில்லி படத்தின் டிக்கெட் புக்கிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img