கலக்க போகிறார் காத்தவராயன்..!

Published:

தனுஷ், ஏஆர் ரகுமான் மற்றும் பிரபுதேவா இணைந்து ஒரு படத்தில் பணி புரிந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்த இயக்கி வரும் திரைப்படம் ’ராயன்’ என்பதும், இது அவரது ஐம்பதாவது படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்தது.  இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் ஒரு அட்டகாசமான பாடல் உருவாகி இருப்பதாகவும், ’மாரி’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு இணையாக இந்த பாடல் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் கிட்டத்தட்ட 500 நடன கலைஞர்கள் இந்த பாடலில் நடனமாடி உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ரவுடி பேபி பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிரபுதேவா தான் இந்த பாடலுக்கும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும் மேலும் இந்த பாடலை ஏஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடியுள்ளதாகவும் தெரிகிறது.

எனவே தனுஷ், பிரபுதேவா மற்றும் ஏஆர் ரகுமான் இணைந்து உருவாக்கிய இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ், காத்தவராயன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img