துபாய் மழை, வெள்ளத்தில் சிக்கிய நடிகை

Published:

தமிழ் நடிகை ஒருவர் துபாயில் செட்டில் ஆகி உள்ள நிலையில் அவர் கனமழையால் தங்களது வீடு இருக்கும் நிலைமை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சசி இயக்கத்தில் உருவான ’555’, மீரா கதிரவன் இயக்கிய ’விழித்தெரு’ உள்பட சில தமிழ் படங்களிலும் ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தவர் நடிகை எரிகா பெர்னாண்டஸ். இவர் தற்போது தனது குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் துபாயில் பெய்த வரலாறு காணாத மழை குறித்து தனது இன்ஸ்டாகிராமில்  வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஆரம்பத்தில் மழை லேசாக பெய்த போது பால்கனியில் இருந்து நாங்கள் மழையை ரசித்ததாகவும், லேசான குளிர் காற்று , மின்னல் மழை, ஆகியவை பார்த்து சந்தோஷமடைந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சில மணி நேரத்தில் திடீரென நகரத்தை மேகங்கள் மூடிவிட்டதாகவும் பலத்த காற்று வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன என்றும் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் அதை வெளியேற்றுவதற்கு நாங்கள் படாத பாடு பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு என்ன ஆனது என்று எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விசாரித்த போது அனைவரிடமும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்தோம் என்றும் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எந்தவிதமான விபரீதமும் நேரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C558SlSSaKU/?utm_source=ig_web_copy_link

Related articles

Recent articles

spot_img