‘தலைவர் 171’ படத்தின் கதை இதுதான்

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று திடீரென சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை வைத்து இந்த படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

ஏற்கனவே ’தலைவர் 171’ போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் கையில் வாட்ச் கட்டி விலங்கு அணிந்த நிலையில் ரஜினியின் போஸ் இருந்ததை பார்த்து இது டைம் ட்ராவல் படமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவிலும் வாட்ச் இருப்பதை பார்த்தவுடன் இந்த படத்தின் கதை நிச்சயம் டைம் ட்ராவல் கதையாக தான் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் நாளை வெளியாகும் டைட்டில் போஸ்டரில் இவர்கள் நடிப்பது உறுதி செய்யப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் தற்போது வசனங்கள் எழுதும் பணியில் இருப்பதாகவும் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தை படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் டைட்டில் நாளை வெளியிடப்படவுள்ளது.

 

Related articles

Recent articles

spot_img