அடுத்தடுத்து வெளியாகும் 2 கமல்ஹாசன் படங்கள்

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதை அடுத்து தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் ஜூன் முதல் வாரம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த இன்னொரு திரைப்படமான ’கல்கி 2898 ஏடி’ என்ற படமும் ஜூன் மாதம் 20ஆம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு வரும் ஜூன் மாதம் கமல்ஹாசனின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ‘இந்தியன் 3’ மற்றும் ‘தக்லைஃப்’ படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்றால் ஒரே ஆண்டில் 4 கமல் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img