சல்மான் கான் பட லேட்டஸ்ட் அப்டேட்

Published:

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான் கான் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பதும் தெரிந்தது.

சல்மான் கான் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு ‘சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தின் நாயகியாக கைரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் இவர் ஏற்கனவே தற்போது ஷங்கர் இயக்கி வரும் ’கேம் சேஞ்சர்’ படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இவர் பல சூப்பர் ஹிட் பாலிவுட் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கைரா அத்வானி தான் நாயகி என்று செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை த்ரிஷாவும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் ’சிக்கந்தர்’ திரைப்படத்தில் சல்மான் கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/ARMurugadoss/status/1778297090164040050

Related articles

Recent articles

spot_img