வழி தெரியாமல் ரூட் மாறிய சிங்கப் பாதை

Published:

சின்னத்திரையில் பிரபலமானதன் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாகி ஜொலித்துக் கொண்டிருக்கும்,

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ் கே 23 படத்தில் பிசியாக உள்ளார்.

தமிழ் திரைத்துறையில் சில சோதனை முயற்சியாக கடந்த ஜனவரியில் வெளியான அயலான், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இரட்டை வேடங்கள் என்பது  முழுமை பெறாத ஒன்றாக உள்ளது.

ரஜினி முருகன் மற்றும் சீமராஜா என்ற இரு படங்களிலும் இரட்டை வேடத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் ரெட்டை வேடம் என்ற கனவை நிறைவு செய்யும்  வண்ணமாக உருவாக இருந்தது தான் சிங்கப் பாதை.

அட்லீயின் உதவி இயக்குனரான அசோக்கின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சிங்கப் பாதை என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருந்தார்.

அப்பா, மகன் என இரு வேடங்களில்  தரமான ஆக்சன் ஸ்டோரியா உருவாக இருந்தது சிங்கப் பாதை. ரஜினி நடித்த “சிவாஜி” படத்தில் “இனி என் பாதை சிங்கப் பாதை!” என்று திருப்பத்தை கொடுத்திருந்தார் தலைவர்.

அதேபோன்று சிவகார்த்திகேயனின் கேரியரிலும் திருப்பத்தை உண்டாக்க இருந்தது இந்த சிங்கப் பாதை.

ஆக்ஷனில் தெறிக்க விடும் சிங்கப் பாதையின் ஸ்டோரியை கேட்டவுடன் எஸ் கே வி க்கு பிடித்துப் போக உடனே இயக்குனரை வளைத்து போட்டார் சிவகார்த்திகேயனின் மேனேஜர் கே ஜே ஆர் ராஜேஷ்.

இத்திரைப்படத்தில் இமான் இசையமைப்பதாக இருந்தது,  இமான் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம், சிவா மற்றும் கே ஜே ஆர் ராஜேஷிற்கு ஏற்பட்ட மோதல் என பல காரணங்களால் சிங்கப்பாதை பாதை மாறியது எனலாம்.

சிங்கப் பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதில்லை என உறுதியானதும் இவரது கதாபாத்திரத்திற்காக ஆர் ஜே பாலாஜி மற்றும் ஹிப்பாப் ஆதியின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இதில் நடிக்க ஆர் ஜே பாலாஜிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img