லார்ன்சின் அதிகாரம் பட அப்டேட்

Published:

ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 ஆம் படம் இது. அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக ‘ஹண்டர்’ படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் கதை வெற்றிமாரன் எழுதியுள்ளார். இப்படம் 2 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிற்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் இப்படத்தை எடுக்கவுள்ளனர். கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இதுக்குறித்து ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் சார், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் மிரண்டுவிட்டேன், மிகவும் பிரம்மிப்பாக இருந்தது.

வெற்றி மாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் முன்பு அறிவித்த இரண்டு படங்களுக்கு பிறகு இந்த படத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது காத்திருப்புக்கு மதிப்பானது மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐயா இதை நடந்ததற்கு. உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும். என பதிவிட்டுள்ளார்.

https://x.com/offl_Lawrence/status/1782025269752000887

 

Related articles

Recent articles

spot_img