விசில போட்டு ஆட்டைய போட்டாரா வெங்கட் பிரபு?

Published:

தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று அமோக வரவேற்பு காணப்படும். அதிலும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.

இளைய தளபதி நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து இருந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனது கட்சியை ஆரம்பித்து தனது ரசிகர்களையே உறுப்பினர்களாக மாற்றி தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடித்தவரும் கோட் படமும், அதற்கு அடுத்ததாக கமிட்டாகியுள்ள விஜயின் 69ஆவது படத்துடனும் தான் சினிமா துறையில் இருந்து ஓய்வெடுத்து முற்றாக அரசியலில் பயணிக்க இருப்பதாக அறிவிப்பொன்றை  வெளியிட்டிருந்தார்.

 

ரணமாக தற்போது விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  காணப்படுகிறது. ஒவ்வொரு அப்டேட்களையும் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில், கோட் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு ஏற்கனவே இயக்கியிருந்த படத்தின் கதை தான் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தின் கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி விஜயின் கோட் படம் சில வருடங்களுக்கு முன்பு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலாஜி  படம் வெளியாகி இருந்தது. அதில் லோகம் என்ற குறும்படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வருண் அதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது லோகம் தான் கோட் படத்தின் கதையாக இருக்குமோ ஆன ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img