ஹரிப்பிரியா ரொமான்ஸ் வீடியோ வைரல்..!

Published:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா ரொமான்ஸுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் மீண்டும் காதலில் விழுந்து விட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுந்து வருகின்றனர்.

’எதிர்நீச்சல்’ சீரியலில்  நந்தினி என்ற கேரக்டரில் ஹரிப்பிரியா நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு பல எபிசோடுகளில் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஹரிப்பிரியா அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ் பார்வையுடன் கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவின் பின்னணியில் ’அவனோடு பேசும் போது அதுபோல வார்த்தை ஏது, உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்’ என்ற த்ரிஷா நடித்த ‘ராங்கி’ பட பாடல் பின்னணியில் ஒலிக்கும் நிலையில் மீண்டும் ஹரிப்பிரியாவுக்கு காதல் வந்து விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஹரிப்பிரியா கடந்த 2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C5_jMYxy5S4/?utm_source=ig_web_copy_link

Related articles

Recent articles

spot_img