விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி..

Published:

சின்னத்திரையிலும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக பெரிதும் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் டிடி. பின் இருவருக்கும் இடையே ஒத்துப்போகாத காரணத்தினால் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், விவாகரத்து குறித்து தொகுப்பாளினி டிடி மனம்திறந்த பேசிய சில விஷயங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

“என் வாழ்க்கையில் நான் விவகாரத்தையும் எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் நான் விவாகரத்து ஆன ஒருவள் என்பதை மக்கள் ஒருபோது நினைவு வைத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் தான் அதை ஞாபகப்படுத்தி கொண்டு இருக்கிறேன்.

அந்த விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே பொது என நினைத்து, அந்த முடிவை எடுத்தேன். அப்போதிருந்த சூழ்நிலைகளும் அதற்கு உதவியாக இருந்தது.

அதனால் அதுவும் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் தான். விவாகரத்து மிக மிக கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் நான் அதிலிருந்து மீண்டுவரவேண்டும் என தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுடன் பேட்டிக்கு தயாராக கொண்டிருந்த போதுதான், எனக்கு விவாகரத்து உறுதியானது என தெரியவந்தது. அப்போது தான் எனக்கு மனதிற்குள் எல்லாமே முடிந்துவிட்டது என உணர்தேன்.

அப்போதுதான் என் மனதிற்குள் எல்லாம் முடிந்து விட்டது என்பது உரைத்தது. உண்மையில் விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட, என்னை அதிகமாக பாதிக்கும்.

 

விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருக்கும் நபரை விட, எனக்கு தான் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் நான் மீடியா வெளிச்சத்தில் இருக்கிறேன். ஆகையால் அதன் விளைவுகளை நான் எதிர்கொள்ள போகிறேன் என்று எனக்குள் சொல்லி முடித்துவிட்டு ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க சென்றேன்” என டிடி பேசினாராம்.

Related articles

Recent articles

spot_img