சங்கீதா அதிர்ச்சி பேட்டி..!

Published:

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா என்ற இலங்கை பெண் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் அவரது மனைவி நடிகை சங்கீதா என்று சிலர் தவறாக செய்தி வெளியிட்டு இருந்ததாகவும் ஆனால் விஜய் என் புருஷன் இல்லை, நான் அவர் பொண்டாட்டி இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் நடிகை சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை சங்கீதா, விஜய் நடித்த ’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் சங்கீதா, விஜய்யை ஒருதலையாக காதலித்தாலும், விஜய் அவரை காதலிக்க மாட்டார் என்பதும் இருவரும் கடைசியில் இணையாத வகையில் பிரிவது போன்று முடிவு அமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியானபோது விஜய் மற்றும் சங்கீதா கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜய்யின் மனைவி பெயர் சங்கீதா என்ற நிலையில் நடிகை சங்கீதா தான் அவருடைய மனைவி என்று சிலர் தவறுதலாக செய்தி வெளியிட்ட நிலையில் அப்போது அந்த செய்தி வெளியானது குறித்து நடிகை சங்கீதா தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நான் யாரை திருமணம் செய்து கொண்டேன் என்பது எனக்கு தெரியும், அதேபோல் விஜய் யாரை திருமணம் செய்து கொண்டார் என்று அவருக்கு தெரியும், நான் விஜய்யின் பொண்டாட்டி இல்லை, அவர் எனக்கு புருஷன் இல்லை என்பது பலருக்கு தெரியும், ஆனால் சிலர் புரிதல் இல்லாமல் ஊடகங்களில் எழுதினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் ’பூவே உனக்காக’ படத்தில் நடிக்கும் போதே எங்களுக்குள் எந்தவிதமான பெரிய நட்பு கூட இல்லை என்றும் அவர் தனது காட்சியை முடித்தவுடன் தனியாக போய் உட்கார்ந்து விடுவார் நானும் அவரிடம் அதிகமாக பேசியது இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு பேட்டியில் நடிகை சங்கீதாவை எனக்கு பிடிக்கும் என்று விஜய் கூறியிருந்தார் என்றும் அவர் எதற்காக அப்படி கூறினார் என்பது இன்று வரை எனக்கு தெரியாது என்றும் சங்கீதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img