சிவா காமெடியில் மிரட்டும் சூது கவ்வும் 2

Published:

பண்பலை தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, அதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாமின் “12B” என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா அவர்கள். 2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 28” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் பல திரைப்படங்களில் இவர் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் “கலகலப்பு”, “தில்லு முல்லு”, “சொன்னா புரியாது”, “வணக்கம் சென்னை”, “தமிழ் படம்” மற்றும் “தமிழ் படம் 2” உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிவா நடிந்து வந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சி.வி குமார் இயக்கத்தில் உருவாகும் “சூது கவ்வும்” படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது சிவா நாயகனாக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து 2வது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

https://x.com/Premgiamaren/status/1782409604678496675

 

Related articles

Recent articles

spot_img