போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் படம்!

Published:

இயக்குனர் முருகதாஸ் சில காலம் எந்த படமும் இயக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் மீண்டும் பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார்.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் எங்கே இருக்கிறார், ஷூட்டிங் எங்கே நடக்கிறது, எத்தனை மணிக்கு வருவார் என எல்லா தகவல்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தையும் பத்து நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை அளிக்க இருக்கிறதாம் போலீஸ்.

இதனால் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் முருகதாஸ் அவரது அடுத்த படத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img