நடிப்பு அரக்கனை வாங்கிய மலையாள சினிமா?

Published:

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ்.ஜே சூர்யா, சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த இயக்குனராகவும் காணப்படுகிறார்.

இவர் இயக்கத்தில் வெளியான வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அன்பே ஆருயிரே, மகாநடிகன், கள்வனின் காதலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனாலும் குறித்த படங்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை.

இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்தார்.அதன்படி விஜய் நடித்த மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா  தற்போது மலையாள திரையுலகிலும் நுழைந்திருக்கிறார். அதன்படி, மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பலராலும் பாராட்டப்பட்ட எஸ்.ஜே.சூர்யா, மலையாளத்தில் எப்படி வரவேற்பை பெறுகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img