ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சரிகமப. இறுதியாக இடம்பெற்ற சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி வாகை சூடி இருந்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதைத்தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இதில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்காக போட்டியிட்ட நிலையில், அவர்களில் 50 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இலங்கையின் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இலங்கை இளைஞருக்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே சரிகமப சீசன் 3 யில் கில்மிசா மற்றும் அசானி கலந்து கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், தற்போது மலையகத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு இளைஞன் சரிகமப மேடைக்கு ஏறுவது பலராலும் வியக்கப்பட்டு வருகிறது.
இவர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தீவிர ரசிகராக இருக்கும் நிலையில், சரிகமப மேடையில் அவருடைய பாடலை பாடி நடுவர்களை கண்கலங்க வைத்துள்ளார்.
மேலும், எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் மிகவும் கடுமையான பாடல்களை பாடியதோடு, எஸ்.பி பாலசுப்ரமணியம் இறந்ததும் தான் ஒரு கிழமையாக சாப்பிடவில்லை எனவும் மேடையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மேடையில் எஸ்பியின் புகைப்படம் போடப்பட்டதும் அங்கிருந்த நடுவர்கள் அழுத காட்சிகளும் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. தற்போது பலரும் அவரை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/C6LOMtXLiJZ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==