வெளியாகிய பேமிலி ஸ்டார் பாடல்!

Published:

ஒரு சில வேற்றுமொழிபடங்களையும் , பாடல்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் போது ரசிகர்களை திருப்திபடுத்தாது ட்ரோல் மெட்டீரியலாகி வருகின்றது. அவ்வாறே பேமிலி ஸ்டார் படம் தோல்வியாக இருந்தாலும் அதில்  ஹிட் ஆகிய பாடல் ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளனர்.

 

கீதா கோவிந்தம் என்ற ஹிட் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர் கொண்டா மற்றும் முருநல் தாகூர்  இணைந்து நடித்த திரைப்படமே பேமிலி ஸ்டார் ஆகும். தெலுங்கு , தமிழ் இரண்டிலும் வெளியாகி இருந்தாலும் இது தோல்விப்டமாகவே அமைந்துள்ளது.

 

 

 

 

 

குறித்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் இதன் கல்யாணி வச்சா வச்சா என்ற பாடல் பெரியளவில் ட்ரென்ட் ஆகியுள்ளது. இந்த நிலையிலேயே இதன் தமிழ் வேர்சனை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்  இதன் வசனங்கள் எதுவும் சரி இல்லை என்றும் தமிழ் மொழி பெயர்ப்பு பிழையாக உள்ளது எனவும். ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். கல்யாண சத்தம் சத்தம் என்று தொடங்கும் இந்த பாடல் தமிழில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும்.

Related articles

Recent articles

spot_img