நடிகையின் அசத்தல் போட்டோஷூட்..!

Published:

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு வரும் கமெண்ட்ஸ்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் விஜய் ஆண்டனி நடித்த ’எமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’காளி’ என்ற படத்தில் நடித்தாலும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் தாரா என்ற கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷில்பா மஞ்சுநாத்.

இதனை அடுத்து ’பேரழகி’ என்ற படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் சமீபத்தில் வெளியான ’சிங்கப்பெண்ணே’ என்ற படத்தில் கூட ஷாலினி என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் அதிரடியாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க அணுகி உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்லிம்மாகி உள்ள ஷில்பா மஞ்சுநாத்தின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இதய ராணிக்கு இப்படி ஒரு இடுப்பா? இஸ்பேட் ராஜாவுக்கு யோகம் தான் என்பது போன்ற கமெண்ட் பதிவாகி வருகிறது என்பதும் இந்த கமெண்ட்களை ஷில்பா மஞ்சுநாத் லைக் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C6MB85uosXq/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==  

https://www.instagram.com/p/C6MBFUVxSrM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

https://www.instagram.com/p/C6MAv0zRamu/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== 

 

 

Related articles

Recent articles

spot_img