ஸ்டார் பட டிரெலர் அவுட்

Published:

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக திகழ்கிறார் கவின். தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியாக நடிகராக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்திற்காக கவின் போட்டுள்ள புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் கவின். இந்த தொடர் மூலமாக கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்தார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். இந்நிகழ்ச்சி மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் இருந்து கவினுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

இதனையடுத்து கடந்தாண்டு கவினின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பியார் பிரேம காதல்’ பட பிரபலம் இளனின் இரண்டாவது படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெலோடி’ பாடலில் கவின் பெண் வேடம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் ‘ரெமோ’ படத்தில் பெண் கெட்டப்பில் வந்த எஸ்கேவுக்கு தற்போது கவின் டப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவின் லேடி கெட்டப்பில் செம்ம க்யூட்டாக இருப்பதாகவும் இணையத்தில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். ‘ஸ்டார்’ படத்தில் கவினுடன், அதிதி பொலங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெலர்  காலை 11.11 க்கு பட குழு வெளியிட்டுள்ளது.

https://x.com/Kavin_m_0431/status/1784095603867496798

Related articles

Recent articles

spot_img