‘கோட்’ அப்டேட் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Published:

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்ப்போம்.

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அன்றைய தினம் ‘கோட்’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வரும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து தகவல் கசிந்துள்ளது.

விஜய்யின் பிறந்தநாளில் ‘கோட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ‘கோட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இரண்டாவது பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் செகண்ட் சிங்கிள் ரிலீசான வின்னர் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img