‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்.

Published:

மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 236 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

கேரளாவில் மட்டுமின்றி இந்த படம் தமிழகத்தில் வசூலில் சக்கை போடு போட்டது என்பதும் இவ்வளவுக்கும் இந்த படம் தமிழில் டப்பிங் செய்யாமல் நேரடியாக மலையாளத்தில் ரிலீஸ் ஆனது போதிலும் வசூலை அள்ளிக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் மே 5ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான போது இந்த படம் மலையாளத்தில் மட்டுமே வெளியான நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் மலையாளம் புரியாமல் பார்த்தவர்களுக்கு தாங்கள் சொந்த மொழியிலேயே பார்க்கும் வசதி கிடைத்துள்ளது ஒரு இன்ப அதிர்ச்சியாகும்.

மொத்தத்தில் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img