விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி இதுவரை நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்த போதிலும், இதன் ஐந்தாவது சீசனை ஆரம்பிக்கும் போதே கலவரமாக காணப்பட்டது.
அதற்கு காரணம் குக் வித் கோமாளி சீசன் 5 வது நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெங்கடேஷ் பட், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.
இதையடுத்து, வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மதம் ரங்கராஜ் என்ட்ரி ஆனார். நேற்றைய தினம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 புதிய கோமாளிகளுடன் ஆரம்பம் ஆனது.
ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒன்றாக பயணித்த வெங்கடேஷ் பட் பற்றி ஒருவர் கூட பேசவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கபட்டது.
இந்த நிலையில், தற்போது சன் டிவிக்கு மாறிய வெங்கடேஷ் பட் பங்கேற்ற டாப் குக்கு.. டூப் குக்கு.. என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கலக்கல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், GP முத்து, தீபா உட்பட விஜய் டிவி பிரபலங்களுடன் வெங்கடேஷ் பட் அதிரடியாக என்ட்ரி ஆகியுள்ளார். இதோ வெளியான ப்ரோமோ,
https://www.instagram.com/reel/C6TvwYHv7Wi/?utm_source=ig_web_copy_link