இந்த வாரம் குக் வித் கோமாளியில் ப்ரோமோ வீடியோ.

Published:

முதல் வாரத்திலேயே ’செஃப் ஆஃப் தி வீக்’ வாங்கி அசத்தினார் சீரியல் நடிகை சுஜிதா. இந்த நிலையில், இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் இந்த வாரம் கடல் சார்ந்த விஷயங்களை வைத்து சமயக்கும் டாஸ்க் கொடுத்துள்ளனர் நடுவர்கள். மேலும் கடந்த வாரம் விடிவி கணேஷிற்கு கோமாளியாக வந்த புகழ் தான் இந்த வாரமும் அவருக்கு கோமாளியாக வந்துள்ளார்.

மீண்டும் புகழை பார்த்தவுடன், நான் கோமாளியை மாற்றி கொள்ளலாமா என நகைச்சுவையாக கேட்கிறார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி என்றால் வாராவாரம் கோமாளிகள் எப்படி என்ட்ரி கொடுக்க போகிறார்கள் என்று தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.

 

 

 

அதை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வாரம் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் தமிழ் சினிமாவில் அசத்திய முக்கிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்திக் கெட்டப்பில் புகழ், கடலோர கவிதைகள் சத்யராஜ் கெட்டப்பில் சரத் என ஒவ்வொரு கோமாளிகளும் கலக்கலாக என்ட்ரி கொடுக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

Related articles

Recent articles

spot_img