‘டாப் குக்கு டூப் குக்கு’ கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்..

Published:

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் நடத்த உள்ளார் என்பதும் மீடியா மிஷன் தயாரிக்க உள்ளது என்பதும் பார்த்திபன் இயக்க உள்ளார் என்பதும் ஏற்கனவே தெரிந்தது.

மேலும் விஜய் டிவி பிரபலங்களான மோனிஷா, ஜிபி முத்து, பரத், தீனா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் குக் வித் கோமாளி அளவுக்கு இந்த நிகழ்ச்சி வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ’டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை கலந்து கொள்ள பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சன் டிவி தரப்பில் இருந்து வடிவேலுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரா? சிறப்பு விருந்தினரா? அல்லது வேறு எந்த பாத்திரத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பதை சன் டிவி சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட டிஆர்பி யில் அதிக ரேட்டிங்கில் ’டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று சன் டிவி முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சி எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img