தனுஷ் பட நடிகை தனது வயிற்றில் மருத்துவர் ஊசி போடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் பிர்சதா. தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்பட சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள மெஹ்ரீனுக்கு 29 வயதாகும் நிலையில், திருமணம் செய்ய காலதாமதம் ஆகும் என்பதால், தனது கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு குழந்தை பெற்றுக் கொள்வது ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ள மெஹ்ரின், கால தாமதமாக திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்க தனது கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்ததாகவும் அதற்காக தான் மருத்துவரிடம் ஆலோசனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்காக நான் என்னை தயார் படுத்திக் கொண்டதாகவும் இந்த விஷயத்தை நான் பகிரலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் தன்னை போன்ற பல பெண்களுக்கு இது உதவும் என்பதால் பகிர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணம் காலதாமதம் ஆகும் பெண்கள் மற்றும் குழந்தை பெறுவதை தள்ளி வைக்கும் பெண்களுக்கு இது உதவும் என்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை நம்மால் செய்ய முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எனது திருமணம் இன்னும் சில வருடங்கள் தாமதம் ஆகிவிட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தான் கருமுட்டையை சேமித்து வைக்க முடிவு செய்தேன் என்றும் தற்போது எனது கருமுட்டையை நான் சேமித்து வைத்துள்ளேன் என்றும் இதற்காக எனக்கு உதவியாக இருந்த என்னுடைய அம்மா மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணம் காலதாமதம் ஆகும் பெண்கள் கருமுட்டையை சேமித்து வைத்துக் கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்வது எளிது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
https://www.instagram.com/reel/C6Xm-TwvinC/?utm_source=ig_web_copy_link